Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

‘அக்தா ஃப்ளெக்ஸிகேப் ஃபண்ட்’ முதலீட்டு திட்டம் அறிமுகம்

‘அக்தா ஃப்ளெக்ஸிகேப் ஃபண்ட்’  முதலீட்டு திட்டம் அறிமுகம்

இத்திட்டம் ‘பி.எம்.எஸ்’ என்ற சிறப்பு முதலீட்டு முறையில் செயல்படுகிறது.

பகிரவும் WhatsApp Facebook

நாட்டின் முன்னணி நிதிச் சேவை நிறுவனமான அக்தா வெல்த் ‘அக்தா ஃப்ளெக்ஸிகேப் ஃபண்ட்’ என்ற புதிய முதலீட்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

 
இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
நிதித் துறையில் நிறுவனத்திற்கு 40 ஆண்டு கால அனுபவம் உள்ளது. பெரும் முதலீட்டாளர்கள், தொழிலதிபர்கள் மற்றும் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்காக அக்தா ஃப்ளெக்ஸிகேப் ஃபண்ட்’ என்ற புதிய திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது .

இத்திட்டம் ‘பி.எம்.எஸ்’ என்ற சிறப்பு முதலீட்டு முறையில் செயல்படுகிறது. அதாவது, முதலீட்டாளர்கள் தாங்களாகவே அலையத் தேவையில்லாமல், பங்குச் சந்தை நிபுணர்களே அவர்களது முதலீட்டுப் பணத்தைப் பொறுப்பேற்று, நேரடியாக அவர்களது பெயரிலேயே பாதுகாப்பாகவும் லாபகரமாகவும் நிர்வகித்துத் தரும் சேவையாகும். இதன் மூலம் மொத்தம் ரூ.100 கோடி முதலீட்டைத் திரட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இதுவரை ரூ.20 கோடிக்கும் அதிகமான நிதி திரட்டப்பட்டுள்ளது.
 
இத்திட்டத்தின் கீழ் முதலீட்டாளர்களின் பணம், இந்தியாவில் உள்ள 25 முதல் 35 முன்னணி நிறுவனங்களின் தரம் வாய்ந்த பங்குகளில் பிரித்து முதலீடு செய்யப்படுகிறது. மேலும் வெளிநாட்டுப் பங்குச் சந்தைகள் மற்றும் தங்கம், வெள்ளி ஆகியவற்றிலும் முதலீடு செய்யப்படுகிறது. இதற்காக இ.டி.எஃப் முறை பயன்படுத்தப்படுகிறது. அதாவது, தங்கத்தை வீட்டில் வாங்கி வைக்காமல், பங்குச் சந்தை மூலமாகவே பங்குகளைப் போல மிக எளிதாகத் தங்கம் மற்றும் வெள்ளியில் முதலீடு செய்து, எப்போது வேண்டுமானாலும் உடனடியாக விற்றுப் பணமாக்கிக் கொள்ளும் வசதி இதில் உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி
மஞ்சள் சாகுபடியை அதிகரிக்க ரூ.88 லட்சம் ஒதுக்கீடு
அடுத்த செய்தி
இலவச வேட்டி, சேலை உற்பத்திக் கூலி உயர்வு: அரசுக்கு ரூ.13.66 கோடி கூடுதல் செலவு

தொடர்புடைய செய்திகள்